பிரித்தானியாவில் ஏற்கணவே சில நகரங்களில் 5G வலையமைப்பு சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் Sky Mobile நிறுவனம் இதுவரை 5G சேவையினை வழங்காதிருந்தது.
எனினும் தற்போது தனது வாடிக்கையாளர்கள் இச் சேவையைப் பெற முடியும் என அறிவித்துள்ளது.
குறித்த நிறுவனத்தின் VIP வாடிக்கையாளர்களும் இச் சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்கான ஆகக்குறைந்த கட்டணமாக 6 பவுண்ட் அறவிடப்படவுள்ளது.
இக் கட்டணத்தில் 3GB வரையான டேட்டாவினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன் 12 பவுண்ட் கட்டணத்தில 9GB டேட்டாவினையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.