அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் இடம் பெற்ற வெறித்தனம் பாடல் யூடியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது.
விஜய் பாடிய இந்த பாடல் வெளியாகி 19 மணி நேரத்தில் 50 இலட்சம் பார்வையாளர்களையும், 7.35 இலட்ச லைக்குகளையும் பெற்றது.
இந்நிலையில் தற்போது 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







