ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், இன்று முக்கியமான இருவேறு கூட்டம்.!!!

ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், இன்று முக்கியமான இருவேறு கூட்டங்களை தத்தமது கட்சிகளின் தலைமையகத்தில் நடத்தவுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், சிறிகொத்தாவிலும், முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில், சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலும் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. அத்துடன், ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் தலைமையிலான சபையொன்றும் நிறுவப்படவுள்ளது.

சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெறும் கூட்டத்தில், தற்போதைய அரசியல் நிலைமை, கட்சியின் எதிர்கால செயற்பாடுகள், எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சி எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கரங்களை பலப்படுத்துவது தொடர்பில் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றைய கூட்டத்தின் போது இறுதித் தீர்மானம் எட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.