தூங்கில் தொங்கிய மாணவி… 2 நாட்களுக்குப் பின்பு அவதானித்த கொடுமை!

ஒருதலைக்காதலால் இளம்பெண் ஒருவர் கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் நிவேதிதா. சேலம் மாவட்டம் ஓமலூரில் இருக்கும் பெரியார் பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி முதுநிலை இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று கள ஆய்விற்காக வெளியே சென்று விட்டு திரும்பிய சக மாணவிகள் பார்க்கையில் நிவேதிதாவின் அறை உள்பக்கமாக தாளிடப்பட்டுள்ளது. ஜன்னல் வழியாக அவதானித்த மாணவிகளுக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

நிவேதிதா தனது அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து சக மாணவிகள் கதறலைக் கேட்டு விரைந்து வந்த விடுதி மேலாளர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளனர்.

பின்பு சடலத்தினை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாணவி தூக்கில் தொங்கி இரண்டு தினங்களுக்கு பின்பே சக மாணவிகள் அவதானித்துள்ளனர் என்று கூறப்படுகின்றது. இது ஒருதலைக்காதலால் இவ்வாறான விபரீத முடிவினை எடுத்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்த மாணவியின் அறையினை சோதனை செய்த பொலிசார், அங்கு கடிதத்தினையும், டைரியையும் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் அவர் கடைசியாக யாரிடம் போனில் கதைத்துள்ளார் என்பதையும் விசாரித்து வருகின்றனர்.

கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் இவர் விடுமுறை தினங்களில் ஊருக்கு சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று மாணவியின் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அவரது தோழிகள் சிலர் அவரை பார்க்க வந்தபோது அவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தார்.