தமிழில் சூரியா நடித்த மவுனம் பேசியதே, இனிது காதல் இனிது போன்ற ஒருசில படங்கள் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகை தேஹா பெண்ட்சே. மராத்தி மொழிகளில் அதிக படங்களில் நடித்தும், இந்தி, மலையாளம், தெலுங்கில் நடித்து வந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் படங்களை தவிர்த்து வருகிறார்.
திரைப்படங்களை தவிர்த்து தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து வருகிறார். சமீபத்தில் ஷர்துல் ஃபயஸ் என்பவரை மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டு சர்ச்சைக்குள்ளானார்.
மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டதை பற்றி பல இடங்களில் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். இது பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பதிலடி கொடுத்துள்ளார். நான் என்ன தவறு செய்தேன். 4 திருமணங்களுக்கு மேல் செய்வது தற்போது சகஜமாகிவிட்ட சூழ்நிலையில் இதுபற்றி இப்படி பேசுவது என்ன நியாயம்.
திருமணத்திற்கு முன் சிலர் பல தொடர்புகளில் இருப்பது அனைவருக்கும் தெரியும். இரண்டு பெண்களோடு ஒரு ஆண் உறவில் இருப்பது சமுகம் குற்றமாக பார்க்கிறது. ஆனால் அதை நான் செய்யாமல் விருப்ப்படி திருமணம் செய்துள்ளேன் என்று நியாயமாக பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.







