, டோனி முதல் முறையாக உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் ரன் அவுட்..!! கவலையில் ரசிகர்கள்..!!

இந்திய அணியின் சிறந்த பினிஷர் என்று அழைக்கப்படும், டோனி முதல் முறையாக உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் ரன் அவுட் குறித்து பேசியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில், நியூசிலாந்து-இந்திய அணிகள் மோதின.

இப்போட்டியில் நியூசிலாந்து அணி நிர்ணயித்த 241 ஓட்டங்களை இந்திய விரட்டிய போது, அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், டோனி மற்றும் ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவரில் 31 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது 49-வது ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசிய டோனி, அதன் பின் எதிர்பாரதவிதமாக கப்திலின் துல்லியமான த்ரோவால் ரன் அவுட்ட ஆனார்.

இதன் மூலம் ஒட்டு மொத்த இந்தியாவின் உலகக்கோப்பை கனவும் தகர்ந்தது. இது குறித்து இதுவரை பேசாமல் இருந்த டோனி, பிரபல ஆங்கில ஊடகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, அவரிடம் இது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் நான் ஏன் டைவ் அடிக்கவில்லை என்ற கேள்வி எழுந்து கொண்டதாக கூறியுள்ளார்.

நான் எனது முதல் ஆட்டத்தில் ரன் அவுட் ஆனேன், இந்த போட்டியில் மீண்டும் ரன் அவுட் ஆனேன். இதனால் நான் ஏன் அப்போது டைவ் செய்யவில்லை என்று நானே சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.

அந்த இரண்டு அங்குலங்களும் நான் டைவ் செய்திருக்க வேண்டும் என்று நானே சொல்லிக்கொண்டே இருப்பதாக கூறியுள்ளார்.