என் புருஷன் இப்படித்தான் இருக்கனும்..!

நடிகைகள் எப்போதும் அவர்களது சமூகவலைதளங்களில் புகைப்படம் வெளியிடுவது, அவர்கள் நண்பர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் எடுத்து வெளியிடுவது என்று சுறுசுறுப்பாக இருப்பார்கள். அந்த வகையில் யாஷிகா தற்போது அவர்க்கு வரும் கணவன் இப்படி தான் இருக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் ஒரு ஹேப்பியான சிங்கிள், எனக்கு வரும் வருங்கால கணவர் ஜென்ட்டில்மேனாக இருக்க வேண்டும். என்னை அதிகமாக காதலிக்க வேண்டும்.

நகைச்சுவை உணர்வு மிக்கவராக, ஜாலியாக ரொமான்டிக்காகவும், சாகச விரும்பியாகவும், கொஞ்சம் திமிர் பிடித்தவராகவும் இருக்க வேண்டும். அவருக்கு பாடவும், நடனமாடவும், சமைக்கவும் தெரிந்திருக்க வேண்டும். முக்கியமாக தாடி வைத்திருக்க வேண்டும் என்கிறார்.

இதனை கேட்ட ரசிகர்கள்,நீங்கள் வெளியிட்ட பார்ட்டி வீடியோவில் உங்களுக்கு லிப்-லாக் கொடுத்த அந்த நபர் யார்..?ஒரு ஆணுக்கு லிப்-லாக் கொடுக்கும் அளவுக்கு நெருக்கமாக இருந்து கொண்டு நான் சிங்கிள் என கூறுகிறீர்கள். ஒரு வேளை பாய் பெஸ்டியா..? -இந்த பாய் பெச்டீஸ் தொல்லை தாங்க முடியலப்பா.. என்று கருத்து கூறி வருகிறார்கள்.