இரத்தமும் சதையுமாக172 சடலங்கள் சிதறி கிடந்த இடத்தில் ஈரான் வீரர்கள் செய்த அருவருப்பான செயல்!

ஈரானில் உக்ரைன் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் அந்நாட்டு அதிகாரிகள் செய்த செயல் கடும் அருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் உள்ள கோமெய்னி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட உக்ரேனிய விமானமான போயிங் 737, தரையில் விழுந்து வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.

விமானத்தில் பயணித்த 167 பயணிகள் 9 விமானக் குழுவினர் என 176 உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவலறிந்த ஈரானிய அவசரசேவை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் சிதறி கிடந்த உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

விமானத்திலிருந்த அனைத்தும் வெடித்து தூள் துள்ளான நிலையில், மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள் சம்பவயிடத்திலிருந்து, சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு சுனாமியில் உயிரிழந்தவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட அஹ்ல் பீட் கொடியை புத்தம் புதிதாக கண்டெடுத்துள்ளனர்.

விமானமே சுக்கு நூறாகி 176 பேர் உயிரிழந்த நிலையில், விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட கொடி அஹ்ல் பீட் கொடிக்கு சிறிது கூட சேதம் ஏற்படவில்லை என பெரிய அதிசயம் போல கண்ட ஈரான் வீரர்கள், சம்பவயிடத்திலே கொடியுடன் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர்.


குறித்த வீடியோ இணையத்தில் பரவ, இதைக்கண்ட பலர் அங்கு சிதறி கிடக்கும் உடல்களை மீட்பதை விட்டு விட்டு வீரர்கள் கொடியுடன் போஸ் கொடுப்பது மிக அருவருப்பாக உள்ளது என பலர் அதிப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.