தர்பார் படத்திற்கு கடும் எதிர்ப்பு!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் 9 ம் தேதி உலகம் முழுக்க வெளியாகவுள்ளது.

படத்திற்கு இன்னும் ஓரிரு நாட்களே இருக்கும் நிலையில் கர்நாடகாவில் படத்தை வெளியிட அங்குள்ள அரசியல் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

படம் கன்னட மொழியில் வந்தால் மட்டுமே இங்கு வெளியிட வேண்டும் என கூறி மற்ற மொழி படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களாம். தியேட்டரில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என கூறியுள்ளார்களாம்.

இதனால் விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.