சினிமா துறையில் உங்களது இலக்கு என்ன? விஜய் சேதுபதி

தமிழ் திரையுலகில் தனது யதார்த்தமான நடிப்பினால் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

அண்மையில் நடந்து முடிந்த ஜீ தமிழ் விருது விழாவில் கலந்து கொண்ட இவருக்கு ‘சமூக அக்கறை கொண்ட நடிகர் என்ற விருது வழங்கப்பட்டது.

அப்போது சேதுபதி அவர்களிடம் ‘நீங்கள் ஹீரோ மற்றும் வில்லன் ரோல்களில் நடிக்கிறீர்கள். உங்களது இலக்கு என்ன’ என்று தொகுப்பாளர் கேட்டார்.

இதற்கு பதிலளித்த சேதுபதி “நீங்கள் எதை வேடுமானாலும் ஆசை படலாம். நீங்கள் ஆசைப்படுவது ஒரு வியாபாரி வந்து கொடுத்து விட முடியும். வியாபாரி அவ்வளவு பெரிய சத்தி வாய்ந்தவர்கள். அவர்கள் உங்களை ஆண்டு விடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் இஷ்டப்பட்டதை பண்ணுவது தான் நல்லது. அப்போது தான் நீங்கள் நீங்களாகவே இருக்க முடியும்”.

“எதற்காக இதை சொல்கிறேன் என்றால் நான் நடிகனாக இருப்பது தான் சிறந்தது என்று நினைக்கிறன். மேலும் இமேஜ் என்பது மிகவும் ஒரு சிறிய விஷயம். அதை பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்திற்குள் நான் அடக்க விரும்ப வில்லை” என்று கூறி பதிலளித்தார் சேதுபதி.