அவுஸ்திரேலியாவுக்கு உதவி செய்யும் கனடா.!! காரணம் இதுதான்

அவுஸ்திரேலியா காட்டுத்தீயை அணைக்க கனடா நாட்டில் இருந்து 95 தீயணப்பு வீரர்களை அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியா காட்டுத்தீயில் 26 பேர் பலியாகியுள்ளனர். மேலும் மில்லியன் கணக்கான விலங்குகள் செத்து மடிந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சனிக்கிழமை கனடாவில் இருந்து 21 தீயணைப்பு அதிகாரிகள், அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நீயூ சவுத் வேல்ஸ் பகுதிக்கு சென்றுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் பரவி வரம் காட்டுத்தீயை கட்டுப்படுத்த ஷிப்ட் அடிப்படையில், கனடியர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில், டிசம்பர் 3, 19, 30 ஆகிய திகதிகளில் சென்ற வீரர்கள் ஜனவரி 9ஆம் திகதிக்குள் நாடு திரும்புவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குழுவிற்கும் 31 முதல் 38 நாட்கள் அளவில் ஷிப்ட் முறைபடி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவுஸ்திரேலிய தரப்பில் நேரடியாக எப்போதும், தீயணைப்பு வீரர்களை கோரவில்லை என்றும், ஆனால், அந்நாட்டின் சூழலை உணர்ந்த கனடா நேரடியாக உதவிக்கு தீயணைப்பு வீரர்களை அனுப்பியுள்ளதாகவும் அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவுஸ்திரேலியா இன்னும் மற்ற உதவிகளை கோரினால், அதையும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம் என்று கனடா அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.