சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி பூங்காவில் கட்டிப்பிடித்து சில்மிஷம்… 17 வயது சிறுமியை வீடியோ எடுத்து மிரட்டல்..!

மும்பை, அந்தேரி லோக்கண்ட்வாலா பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. ஜோக்கர்ஸ் பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஆசாமி ஒருவர் சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து உள்ளார். அழகாக இருப்பதாக கூறி சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறினார்.

இந்தநிலையில் திடீரென சிறுமியை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து சில்மிஷம் செய்து தனது செல்போனில் பதிவேற்றம் செய்து கொண்டார். மேலும் சிறுமியின் செல்போன் நம்பரை பெற்றுக்கொண்ட ஆசாமி அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் பதறிப்போன அவர்கள் அந்த ஆசாமியை பிடிக்க பிரபல இந்தி நடிகர் சுசாந்த் சிங்கின் உதவியை நாடினர்.

இதைத்தொடர்ந்து இந்தி நடிகர் சுசாந்த் சிங் சம்பவம் குறித்து ஓஷிவாரா போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் அந்த ஆசாமியை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே சிறுமியின் செல்போனுக்கு அந்த ஆசாமி போன் செய்து அந்தேரி வரும்படி கூறினார். இது குறித்து சிறுமி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து உஷாரான போலீசார், அங்கு சென்று ஆசாமியை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் அபினவ் தேஜேந்தர் சிங் என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.