பிரித்தானியவில் லொட்டரியில் பரிசு விழுந்த மகிழ்ச்சியை உடனே கொண்டாடாமல் தள்ளி வைத்த தம்பதி: சந்தோஷமான காரணம்!

லொட்டரியில் 2 மில்லியன் பவுண்டுகள் பரிசு கிடைத்தும், அதை சில நாட்கள் தள்ளி கொண்டாடியிருக்கிறார்கள் ஒரு பிரித்தானிய தம்பதி, காரணம் அவர்களது மகன்!

John மற்றும் Allison McDonald தம்பதிக்கு லொட்டரியில் 2 மில்லியன் பவுண்டுகள் பரிசு கிடைத்தது.

ஆனால் அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடாமல் வேறொரு நல்ல செய்திக்காக காத்திருந்தார்கள் அவர்கள்.

அந்த நல்ல செய்தி, அவர்களது 15 வயது மகன் Ewan குறித்தது. ஆம், Ewan புற்றுநோயால் பாதிக்கபட்டிருந்தான்.

அவன் சுகம் பெறுவதுதான் லொட்டரியில் பரிசு பெறுவதை விட மகிழ்ச்சியான செய்தி என்று அந்த தம்பதி மருத்துவர்களின் அழைப்புக்கக காத்திருந்தார்கள். அவர்கள் ஆசைப்பட்டது போலவே அந்த அழைப்பும் வந்தது.

லொட்டரி விழுந்து மூன்று நாட்கள் சென்றதும், Ewan முற்றிலுமாக புற்றுநோயிலிருந்து விடுபட்டுவிட்டான் என்ற செய்தி அவர்களுக்கு கிடைத்தது. இப்போது இரட்டிப்பான மகிழ்ச்சி கிடைத்த நிலையில், தங்கள் வெற்றியை மகனுடன் கொண்டாடுகிறார்கள் அந்த பெற்றோர்.

வாரத்திற்கு 70 மணி நேரம் கடுமையாக உழைத்த செக்யூரிட்டி ஆபீஸரான McDonaldம், மூக்குக்கண்ணாடி கடையில் வேலை பார்த்த அவரது மனைவி Allisonம் தற்போது தங்கள் வேலையை விட்டுவிட்டு குடும்பத்துடம் நேரம் செலவிட முடிவு செய்துள்ளார்கள்.

குறிப்பாக பல நாடுகளை சுற்றிப்பார்க்கும் ஆசை குடும்பத்தில் அனைவருக்குமே உள்ளது.