அரை மணிநேரத்தில் கதையை ஓகே செய்த சூர்யா!!

தமிழ்சினிமாவில் நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், பின் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். காக்க காக்க,சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்கள் சூரியாவின் நடிப்பு திறமைக்கு சான்றாக உள்ளது. நடிகர் சூரியா 2019 ஆம் வருடம் காப்பான், NGK ஆகிய திரைப்படங்களில் நடித்தார், குறிப்பாக அதிக எதிர்பார்ப்புடன் வெளியான NGK திரைப்படம் தோல்வியடைந்தது.

நடிகர் சூரியா தற்ப்போது சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்துவருகிறார், சூரரைப்போற்று திரைப்படத்திற்க்கு பின் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்கயுள்ளர். சூரியா மற்றும் வெற்றிமாறன் இணையும் இப்படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்க உள்ளார், இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்,நடிகைகள் குறித்த தேர்வு தற்ப்போது நடைபெற்று வருகிறது.

நடிகர் சூரியாவிடம் கதை கூறிய நிகழ்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் வெற்றிமாறன் ” நடிகர் சூரியாவை சந்தித்து ஒரே ஒரு முறை மட்டுமே கதையை கூறினேன், அதிலும் குறிப்பாக கதை கூற துவங்கிய அரை மணி நேரத்தில் நடிகர் சூரியா கால்ஷீட் கொடுத்துவிட்டார்,இது எனக்கு பெருமையாக உள்ளது” என்றார். இயக்குனர் வெற்றிமாறனைப்பொறுத்தவரை 2019ல் அசுரன் என்ற வெற்றிப்படத்தை கொடுத்துள்ளார், அசுரன் திரைப்படம் ஒட்டுமொத்தமாக உலக அளவில் 68கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.