ஈஸியான பிரட் உப்புமா…

உப்புமா என்றாலே ரவை, ஓட்ஸ், கோதுமை ரவை போன்ற வகைகளில் மட்டுமே செய்து அழுத்து போன உங்களுக்கு வித்தியாசமான சுவையில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பிரட் உப்புமாவை எளிதாக எப்படி செய்வது? என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பிரட் துண்டுகள் – 8
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 3
இஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு
கடுகு – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லிதழை – சிறிதளவு
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை :

முதலில் பிரட்டை சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பிரட் துண்டுகளை பொரித்துக் கொள்ளவும். பின்பு பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லிதழை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சோம்பு, உளுந்தம்பருப்பு போட்டு, பின்பு நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

பிறகு, வதக்கியவுடன் அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட்டு தண்ணீர் சிறிது சுண்டியதும், பொரித்து வைத்துள்ள பிரட் துண்டுகளைப் போட்டு கிளறி கொத்தமல்லிதழை தூவி இறக்கினால் குழந்தைகளுக்குப் பிடித்தமான பிரட் உப்புமா தயார்.