‘நட்புனா என்னனு தெரியுமா ?’ – லொஸ்லியா

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார் லொஸ்லியா. சீசன் 3இல் கலந்துகொண்டு போட்டியாளர்களில் பெரிதும் பிரபல்யமானவர் லொஸ்லியாவே.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற Behindwoods Gold Medals விருது வழங்கும் விழாவில் அவர் பங்கேற்றார். அப்போது அவருக்கு Most Popular Person On Television விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதனையடுத்து தொகுப்பாளர் நிக்கி அவரிடம் காதில் ஹெட்போன் மாட்டிக்கொள்ள சொன்னார். அதில் மிகவும் சத்தமாக பாடல் ஒலிபரப்பாகும். நிக்கி சொல்வதை அவர் வாய் அசைவை வைத்து திருப்பி சொல்ல வேண்டும். அப்போது நிக்கி நட்புனா என்னனு தெரியுமா என தளபதி பட டயலாக்க சொல்ல அதனை லொஸ்லியா சொல்வதற்கு சிரமபட்ட காட்சி வைரலாகி வருகிறது.