தமிழகத்தை உலுக்கிய சம்பவத்தில் தீர்ப்பு!

தமிழகத்தில் 6 வயது சிறுமி பாலியல்பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறுமியின் தாய் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இன்னொரு நபருக்கும் இதே போன்று தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கோயமுத்தூர் துடியலூரை அடுத்த பன்னீர்மடை பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் 25-ஆம் திகதி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென்று காணமல் போனார்.

இதையடுத்து அடுத்த நாள் வீட்டின் எதிரே அந்த சிறுமி துணியால் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இது தொடர்பாக பொலிசார் சுமார் 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்ட போது, சந்தோஷ்குமார் என்பவரை அதே மார்ச் மாதம் 31-ஆம் திகதி பொலிசார் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை போக்ஸோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சந்தோஷ்குமாருக்கு ஆயுள்தண்டனை மற்றும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த வழக்கு குறித்து சிறுமியின் தாய் பேசுகையில், இந்த சம்பவம் நடந்து 10 மாதங்கள் ஆகிவிட்டது. என் குழந்தையின் எலுக்பு கூட மிஞ்யிருக்காது.

இந்த 10 மாதத்தில் பையத்தியம் பிடித்தவள் போன்று ஆகிவிட்டேன், என் குழந்தையின் நினைவு என்னை மிகவும் பாதித்ததால், அந்த இடத்தை விட்டு வேறொரு இடத்திற்கு குடிபெயர்ந்தேன். தீர்ப்பு தேதி தெரிந்ததும் குற்றவாளி சந்தோஷுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என மகிழ்ச்சியாக இருந்தேன்.

ஆனால், திடீரென்று எனது வழக்கறிஞர் இதில் இன்னொருவருக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று கூறிய போது அதிர்ச்சி அடைந்தேன், இந்த 10 மாதமும் தப்பு செய்த நபர் சுதந்திரமாக வெளியில் நடமாடிக் கொண்டிருக்கிறான் என்று நினைக்கும் போது, என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை

சந்தோஷுக்கு எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டதோ, அதேபோல இன்னொரு நபருக்கும் இதே மாதிரி தண்டனை எப்போது கிடைக்கிறதோ அப்போதுதான் என் மனது ஆறும். அதுவரை எனக்கு சந்தோஷம் கிடையாது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.