கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன இஸ்லாமிய பிரபலம் மீது விமர்சனம்.

இஸ்லாமியரான பிரித்தானிய முன்னாள் குத்துச்சண்டை சாம்பியனான ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்னதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

பிரித்தானிய முன்னாள் குத்துச்சண்டை வீரரான Amir Khan (33), தனது மனைவி Faryal Makhdoom (28) மற்றும் பிள்ளைகள் Lamaisah (5) மற்றும் 20 மாத குழந்தை Alayna ஆகியோருடன் ஒரே மாதிரி உடையணிந்து கிறிஸ்துமஸ் மரம் ஒன்றின் முன்னால் நிற்கும் புகைப்படம் ஒன்றை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

அந்த படத்தின் கீழ், எங்களிடமிருந்து உங்களுக்கு விடுமுறை வாழ்த்துக்கள், பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் என்று எழுதியிருந்தார்.

ஆனால், ஒரு இஸ்லாமியராக இருந்துகொண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்வதா என கடுமையாக விமர்சிக்கப்பட்டார் அவர்.

ஆனால், கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்னதற்காக தன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்தைக் கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்த அவர், இதையெல்லாம் கண்டு தான் கவலைப்படப்போவதில்லை என தன்னை விமர்சித்தவர்களை கெட்ட வார்த்தையால் திட்டி ஒரு ட்வீட்டை பதிவேற்றம் செய்துள்ளார்.

அத்துடன், இன்னொரு பக்கம் அவருக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள், நீங்கள் மிகவும் சிறந்த மனிதர், அவர்கள் பொறாமை பிடித்தவர்கள் என்று ஒருவர் கூற, மற்றொருவர், கவலைப்படாதீர்கள் ஆமீர், உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நீங்களும் மகிழ்ச்சியாக இருங்கள், உங்கள் நலம் விரும்பிகள் நிறைய பேர் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.