பல மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் ஆப்பில் அறிமுகமாகும் இரு பிரதான புதிய வசதிகள்

பல மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ள குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப்பில் அடுத்த வருடம் சில புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இவற்றில் இரு வசதிகள் பிரதானமானவையாகக் கருதப்படுகின்றது.

அவற்றில் ஒன்று Dark Mode வசதியாகும், மற்றையது Face Unlock வசதியாகும்.

அனேகமான மொபைல் அப்பிளிக்கேஷன்களில் Dark Mode வசதியானது அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் வாட்ஸ் ஆப்பின் சில பீட்டா பதிப்புக்களில் மாத்திரம் இதுவரை சோதனை முயற்சியாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அடுத்த வருட ஆரம்பத்தில் இவ் வசதி அனைத்து பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதேபோன்று வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷன் ஆனது பயனரின் முகத்தினை அடையாளம் கண்டு திறக்கக்கூடிய Face Unlock தொழில்நுட்பமும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இவ் வசதி மூலம் ஒருவருடைய வாட்ஸ் ஆப் செயலியினை அனுமதியின்றி மற்றையவர்கள் பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.