தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மட்டுமே தெரியும் சூரிய கிரகணம்..!!

சூரியனை, நிலவு முழுமையாக மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் என்றும், சூரியனின் மையப்பகுதியை மட்டும் மறைத்து விளிம்பில் வளையம்போல ஒளி தெரிந்தால் அது வளைய சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்ற, வளைய சூரிய கிரகணம் இன்று காலை சரியாக 8.06 மணிக்கு தொடங்கி, காலை 11.14 மணி வரை நீடிக்க உள்ளது. தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், ஈரோடு, மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் சூரிய கிரகணம் முழுமையாக தெரியும்.

இந்த சூரிய கிரகணம் தமிழகத்தில் மட்டுமே தெரிய உள்ளதால்,  இதனைக் காண பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.