மோசமான பரிசு கொடுத்த அம்மாவுக்கு அதிரடி சர்ப்ரைஸ் கொடுத்த சுட்டி மகள்!

குழந்தைகளின் ஆசையும், எதிர்பார்ப்பும் எப்போதும் மிகவும் வித்தியாசமாகவே இருக்கும்.

அதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு இந்த காணொளி. அம்மா கொடுத்த மோசமான பரிசை கூட துள்ளி குதித்து ஒரு குழந்தை ரசித்த காட்சி 20 மில்லியன் பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது.

பெண் ஒருவர் தனது குழந்தைக்கு கிறிஸ்துமஸ் பரிசாக ஒரு வாழைப்பழத்தை தருகிறார். இது குழந்தையை ஏமாற்ற அவர் செய்திருக்கிறார்.


ஆனால் ஆவலாக பரிசை பிரித்து பார்த்த குழந்தை பார்த்ததும் பனானா பனானா என துள்ளி குதித்து வாழைப்பழத்தை ருசிக்கிறது.

இதில் ஆச்சரியம் என்னவெனில் குழந்தைக்கு சர்பிரைஸ் செய்ய நினைத்த தாய் தான் உண்மையிலேயே ஆச்சரியத்தில் ஆழ்ந்து போயுள்ளார். இதனை அவரே இணையத்தில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.