சென்னை ஐஐடி மாணவன் போராட்டத்தில் பங்கேற்றதால் ஜெர்மனுக்கு திருப்பி அனுப்பப்பட்டர்!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதனால் சென்னை ஐஐடி மாணவர், அவரது சொந்த நாடான ஜெர்மனுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை ஐஐடியிலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மாணவர் ஜாக்கோப் என்பவரும் பங்கேற்றார்.

தொடர்ந்து, அரசு அனுமதி பெறாத போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக அவர் ஜென்மம் நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டார். படிப்பதற்காக விசா பெற்று சென்னை வந்துள்ள நிலையில், அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ஐஐடி தரப்பில் இருந்து விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.