தளபதி65 பிரம்மாண்ட கூட்டணி..!!

நடிகர் விஜய் தற்போது தளபதி64 படத்தில் நடித்து வருகிறார். அதன் பணிகள் இன்னும் ஒருசில மாதங்களில் முடிந்துவிடும். அதனால் அடுத்து விஜய் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பல முன்னணி இயக்குனர்கள் பெயர்கள் கூறப்பட்டு வருகின்றன. ஆனால் எதுவும் இன்னும் உறுதியாகவில்லை.

இந்நிலையில் தளபதி65ஐ தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். இதனால் சர்க்கார் படத்திற்கு பிறகு மீண்டும் இந்த பிரம்மாண்ட கூட்டணி இணையும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.