ரஜினியுடன் இணையும் ‘தல’ அஜித்தின் தம்பி..!

இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.

ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தொடங்கிய தர்பார் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துள்ளது, இந்த நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்க இருப்பதாகவும், கிராமப்புறத்தை மையமாக வைத்து பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக உருவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தலைவர் 168 படத்தில்  நடிகரும் இயக்குநர் சிவாவின் தம்பியுமான பாலா முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்கவுள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சிவா இயக்கத்தில் அஜித்தின் வீரம் படத்தில் அஜித் தம்பியாக பாலா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.