அட்லீ-விஜய் கூட்டணியில் 3வது முறையாக பிரம்மாண்டமாக தயாரான படம் பிகில். தீபாவளி அன்று படத்தின் ரிலீஸ், எப்போதும் போல சரவெடியுடன் ரசிகர்கள் வரவேற்றார்கள்.
படமும் ரூ. 250 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துவிட்டது. 25வது நாளை தாண்டி 50வது நாளையும் எட்டிவிட்டது.
அரை சதம் படம் அடித்துள்ளதே ரசிகர்கள் கொண்டாடாமல் இருப்பார்களா? சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் விஜய்யின் பிகில் படத்தின் 50வது நாள் கொண்டாட்டம் நடந்துள்ளது.
இதில் ரசிகர்கள் விஜய்யின் ராயப்பன் லுக் சிலைமை வடிவமைத்து கொண்டாடியுள்ளனர், ஆனால், இது பலராலும் கிண்டல் செய்யப்பட்டும் வருகின்றது.








