நளினிக்கு இவ்வளவு அழகான மகளா?

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நளினி.

இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் மோகன்லால், மம்மூட்டி, விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் மோகன் ஆகியோருடன் நாயகியாக நடித்துள்ளார்.

இவர் நடித்த நூறாவது நாள், 24 மணி நேரம் போன்ற படங்கள் இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

1990 களுக்கு பிறகு சினிமாவில் அதிகம் காணப்படாத நளினி, 1980களின் கிராமத்து ரசிகர்களின் மன்னன் நடிகர் ராமராஜனை திருமணம் செய்து கொண்டார்.

சினிமாவில் அவ்வப்போது தலைகாண்பித்து வந்த நளினி சின்னதிரையில் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியல் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார்.

இந்நிலையில், இவருக்கு இரு பிள்ளைகள் பிறந்தனர். ஒருவர் மகன் அருண் மற்றொரு மகள் அருணா. ஊடகங்களில் தங்களது முகங்களை அவ்ளவாக இவர்கள் காண்பித்தது இல்லை. இந்த நிலையில் அவர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.