கேரள மாநிலத்தில் காலையில் நண்பன் பரிசளித்த லொட்டரி சீட்டு: மாலையில் கோடீஸ்வரரான இளைஞர்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் நெருங்கிய நண்பர் பரிசளித்த லொட்டரி சீட்டால் இளைஞர் ஒருவர் கோடீஸ்வரரான சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவின் சொவ்வர பகுதியில் வாடகை டாக்ஸி சாரதியாக இருப்பவர் 33 வயதான ஷாஜி. இவரே தமது நெருங்கிய நண்பரான சந்தோஷ் என்பவருக்கு லொட்டரி சீட்டு ஒன்றை பரிசாக அளித்தவர்.

சம்பவத்தன்று காலையில் 50 ரூபாய் மதிப்பிலான காருண்யா லொட்டரி சீட்டை வாங்கி நண்பருக்கு பரிசளித்துள்ளார் ஷாஜி.

ஆனால் அன்று மாலையில் சந்தோஷின் சகோதரர் மொபைலில் அழைத்து தகவல் தெரிவித்தபோது சந்தோஷ் நம்பவில்லை என்றே கூறப்படுகிறது.

முந்தைய நாள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது ஷாஜி தமது நண்பரிடம் கூறியுள்ளார், தாம் வாங்கி பரிசளிக்கும் லோட்டரியால் கண்டிப்பாக உதவி கிடைக்கும் என தெரிவித்திருந்தார்.

இதுவே அடுத்த நாள் மாலையில் பலன் கண்டுள்ளது. ஷாஜி அளித்த லொட்டரி சீட்டில் முதல் பரிசாக ஒரு கோடி சந்தோஷிற்கு கிடைத்துள்ளது.

வாடகை டாக்ஸி சாரதியான ஷாஜி லொட்டரி சீட்டு வாங்குவதை வாடிக்கையாக கொண்டவர். ஆனால் இதுவரை சொல்லிக்கொள்ளும் வகையில் பரிசு கிடைத்ததில்லை.

ஒருமுறை டாக்ஸி சாரதிகள் நண்பர்கல் அனைவரும் சேர்ந்து மொத்தம் 33,000 ரூபாய் அளவுக்கு லொட்டரி வாங்கியுள்ளனர்.

ஆனால் அந்த மொத்த லொட்டரியிலும் பரிசாக வெறும் 600 ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது.

தற்போது சந்தோஷிற்கு பரிசாக கிடைத்த ஒரு கோடி பணத்தில், புதிதாக ஒரு ஓட்டோ வாங்கவும் எஞ்சிய பணத்தில் தமது குடும்பத்திற்கு உதவ வேண்டும் என ஷாஜி முடிவு செய்துள்ளதாகவும்,

ஓட்டோ பரிசளித்தது மட்டுமின்றி சந்தோஷின் மகன் பெயரில் கொஞ்சம் தொகை வங்கியில் சேமிக்க வேண்டும் எனவும் ஷாஜி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.