லவ்வர் புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்.!

இயக்குனர் அர்ஜுன் காமராஜ் இயக்கத்தில், திரையுலக பிரபலங்களான ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், இளவரசு மற்றும் பிளேடு ஷங்கர், முனிஷ்காந்த ஆகியோர் நடித்து வெளிவந்த திரைப்படம் கனா. இப்படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேசை நோக்கி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் தேடி வருகின்றன. விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் படத்தில் முதலில் ஐஸ்வர்யாவை நடிக்க வைத்துள்ளார்.

அடுத்து தெலுங்கில் இன்னொரு கதையையும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்தது போல, இந்தப் படத்தில் மல்யுத்த வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது தெலுங்கு பட முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து வருகிறார்.

‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ என்ற படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்ரின் திரசா, இஸபெல் லெயிட் என நான்கு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் விஜய் தேவரகொண்டா, ஐஸ்வர்யா ராஜேஷ் இடம் பெற்றுள்ள போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வருகிற பிப்ரவரி 14-ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது.