இன்று என் தங்கையுடன் படுக்கையில் ஒன்றாக இருப்பார்!!!

இந்தியாவில் ஐ.பி.எல் டி20 போட்டிகள் கடந்த 13 வருடங்களாக நடைபெற்று வருகிறது. தென்னாப்பிரிக்காவில் தற்போது உள்ளூர் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று பார்ல் ராக்ஸ் மற்றும் நெல்சன் மண்டேலா கெயின்ட்ஸ் அணிகளும் மோதியது.

இதில் பார்ல் ராக்ஸ் அணியின் கேப்டனாக டு பிளெசிஸ் இருந்து வருகிறார். ஆட்டம் ஆரம்பிக்கும் போது டு பிளெசிஸிடம் வர்ணனையாளர் ஆட்டத்தில் உங்கள் அணியில் மாற்றமா? என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர் ஹார்டஸ் வில்ஜோன் இந்த போட்டியில் ஆடமாட்டார். ஏனென்றால் அவருக்கும் என் தங்கைக்கும் திருமணமாகி படுக்கையில் ஒன்றாக இருப்பார்கள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.