நீச்சல் உடை உலக அழகி போட்டியில் மேடையில் வழுக்கி விழுந்த போட்டியாளர்!
உலக அழகிகளுக்கான நீச்சலுடை போட்டியின் போது மேடையில் ஈரமாக இருந்ததால் போட்டியாளர் வழுக்கி விழுந்து மீண்டும் எழுந்து ரேம்ப் வாக் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
2019 ஆம் ஆண்டிற்கான உலக அழகி போட்டி அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் நடைபெற்று வருகிறது.
இதில், பங்கேற்ற போட்டியாளர்களுக்கு நீச்சலுடையில் ரேம்ப் வாக் சுற்று நேற்று நடைபெற்றது.
அப்போது, பல்வேறு நாட்டு அழகிகளும் தங்களுக்கு உண்டான ஸ்டைலில் வீரநடைபோட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, ஃப்ரான்ஸ் அழகி மேவா குக்கே என்பவர் நீச்சல் உடையில் நடைபோட்டுக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மேடையில் ஈரமாக இருந்ததால் வழுக்கி கீழே விழுந்துள்ளார்.
இருப்பினும், சற்றும் மனம் தளராமல் பொறுமையுடன் எழுந்து புன்சிரிப்புடன் மீண்டும் நடை போட்டார். அவருக்கு அரங்கில் இருந்தவர்கள் உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இதுகுறித்த வீடியோவை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மேவா குக்கே. குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.