பல்வலிக்கு சிறந்த தீர்வு..! என்ன தெரியுமா ??

பல் வலி குறைய துளசி இலை இரண்டு, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் அழுத்தி வைத்தால் வலி குறையும்.

வாழைத்தண்டை மிக்ஸியில் போட்டு ஜூஸாக்கி, அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு, பிறகு ஆற விடுங்கள். ஆறிய ஜூஸில் மோரும், கொஞ்சம் உப்பும் கலந்து குடித்தால் உடலுக்கு குளிர்ச்சி தரும்.

ஐஸ்கிரிம் தயாரிக்கும் முன் அந்த கலவையுடன் திரவ நிலையில் குளுகோஸ் சிறிது சேர்த்தால், மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.

உப்புமா, சாதம், பொரியல், பிரியாணியை ஓவனில் சூடு செய்ய விரும்பினால் சிறிதளவு நீரை தெளித்து சூடு செய்தால் வறண்டு போகாமல் இருக்கும்.

பயிறு வகைகளை சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைத்தால் பல நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

மைதா மாவினால் செய்த உணவுகளை குறைத்து கொண்டால் உடல் பருமன் குறையும்.

இட்லி மீந்து விட்டால் நன்றாக உதிர்த்து தேவையான அளவு கடலை மாவு, பெருங்காயம், வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நீர் விட்டு பிசைந்து, கடாயில் எண்ணெய் விட்டு பொரித்து எடுக்க சுவையான இட்லி பக்கோடா தயார்.

உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.