விமான நிலையத்தில் 2 வயது பிள்ளையுடன் இளம் தாயார் அதிரடி கைது!!!

அயர்லாந்தின் டப்ளின் விமான நிலையத்தில் வந்திறங்கிய துருக்கி விமானத்தில் இருந்து 2 வயது குழந்தையுடன் இளம் தாயார் ஒருவர் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அயர்லாந்து ராணுவ அதிகாரியும் ஐ.எஸ் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மதம் மாறி சிரியா சென்றவருமான 38 வயது லிசா ஸ்மித் என்பவரே ஞாயிறன்று பகல் விமான நிலையத்தில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அயர்லாந்து ராணுவத்தில் லிசா ஸ்மித் பணியாற்றிய காலகட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களின் வெளிநாட்டு பயணங்களில் பாதுகாப்பு குழுவில் இடம்பெற்றிருந்தார்.

ஆனால் இஸ்லாம் மததிற்கும் மாறிய லிசா ஸ்மித் 2015 ஆம் ஆண்டு சிரியாவுக்கு மாயமானார்.

தற்போது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பானது சின்னாபின்னமான நிலையில், தப்பிப்பிழைத்தவர்களில் ஒருவரான லிசா ஸ்மித், தமது 2 வயது குழந்தையுடன் சிரியா அகதிகள் முகாம் ஒன்றில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் துருக்கியில் இருந்து வெளியேற்றப்பட்ட லிசா ஸ்மித் ஞாயிறன்று டப்ளின் விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

தொடர்ந்து அவர் தீவிரவாத தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டார். இந்த தகவலை அயர்லாந்து பொலிசாரும் உறுதி செய்துள்ளனர்.

அவரிடம் இருந்து குழந்தையை மீட்கப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் விசாரணைக்காக தனி இடத்தில் அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ் அமைப்பில் இணையும் இளம் பெண்களுக்கு இவர் பயிற்சி அளித்து வந்துள்ளதாக கூறப்பட்ட புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ல லிசா ஸ்மித், தாம் இதுவரை எவரையும் கொன்றதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.