மீன் பிரியாணி..! செய்வது எப்படி.?!

தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி – 1 கிலோ
மீன் – 1 கிலோ
வெங்காயம் – 4
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
தக்காளி – 5
பச்சை மிளகாய் – 4
பட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை – தலா 2
தயிர் – 1 கப்
மிளகாய் தூள் – கால் டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
சோம்பு தூள் – 2 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
சீரகத் தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் பால் – ஒரு கப்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
புதினா இலை – 1 கப்
கொத்தமல்லித் தழை – 1 கைப்பிடி
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :

மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். மீனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து இரண்டு புறமும் நன்றாக பிரட்டி வைக்கவும்.

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் வைக்கவும். பிரட்டி வைத்த மீனை தவாவில் போட்டு அரை பதமாக பொரித்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலையை போட்டு தாளிக்கவும்.

பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது, சோம்பு சேர்த்து வதக்க வேண்டும்.

அதனுடன் தக்காளி, கரம் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறவும். பின் கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும். பின்னர் தயிர், தேங்காய் பால், எலுமிச்சை சாறு சேர்த்து இரண்டு நிமிடம் வேக விடவும். பிறகு பொரித்த மீன் துண்டுகளைப் போட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும்.

கொதித்த பின் மீனை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். பின் அரிசியைக் களைந்து குருமாவில் போட்டு மூடி 20 நிமிடம் சிம்மில் வேக விடவும். வெந்த பின் நன்கு கிளறி விட்டு, மீன் துண்டுகளை அதில் போடவும். பின் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.