சாலைக்கு வந்த காட்டுமான்! பறிபோன 5 வயது சிறுவன் உயிர்…!!

கனடாவில் சாலை நடுவே காட்டுமான் வந்ததால் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சிறுவனுக்கு இறுதிச்சடங்கு நடந்துள்ள நிலையில் அவன் குறித்த நினைவுகளை குடும்பத்தார் பகிர்ந்துள்ளனர்.

Quebec மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த 17ஆம் திகதி மதியம் 2 மணியளவில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

அப்போது சாலையின் நடுவே காட்டுமான் ஒன்று வந்ததால் ஓட்டுனர் வேகமாக பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினார்.

அந்த சமயத்தில் ஐந்து பேருடன் வந்த இன்னொரு காரும் காட்டுமான் மீது மோதிய நிலையில் பின்னர் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் இருந்த சிறுவன் ஜக்கீல் (5) அவன் சகோதரி அடிலீ (2) உள்ளிட்ட ஐவர் காயமடைந்தனர்.

இதையடுத்து மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்ட நிலையில் ஜக்கீல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இதில் அடிலீ இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். இதனிடையில் பிரேத பரிசோதனை முடிந்து ஜக்கீல் சடலத்துக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

இதையடுத்து தேவாலயத்தில் நேற்று கூடிய அவன் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் ஜக்கீலுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஜக்கீல் குறித்து அவன் தாத்தா மைக் கூறுகையில், இன்று எல்லோரும் பச்சை நிறத்தில் உடை அணிந்துள்ளோம்.

இதற்கு காரணம் அவனுக்கு பச்சை நிறம் மிகவும் பிடிக்கும்.

இந்த வயதிலேயே அவனுக்கு நகைச்சுவை திறன் அதிகமாக இருந்தது, ஹாக்கி விளையாட்டிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தான்.

ஜக்கீல் இறந்தாலும், அவனுடைய நினைவுகள் எங்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் என உருக்கமாக கூறியுள்ளார்.