தினமும் இப்படித்தான்.. 61 வயது முதியவரின் காம கொடூரம்.. வெளியான தகவல்.!!

நாம்வாழும் உலகில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. பாலியல் வன்கொடுமை போன்ற பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில்., ஆபாச படம் பிடித்து வரும் பிரச்சனை அவர்களின் வாழ்க்கையை சீரழித்து விடுகிறது.

சீன நாட்டில் வசித்து வரும் 61 வயதான பூன் ஹேங் வா என்ற நபர், கடந்த 2017 ஆம் வருடத்தின் போது பெண்களுக்கு தெரியாமல் அவர்களை ஆபாசமாக படம்பிடிக்கும் கொடூர செயலை செய்து வந்துள்ளான்.

மேலும்., பேருந்துகளில் குட்டையான பாவாடை போன்ற ஆடைகளை அணிந்திருக்கும் பெண்களின் அந்தரங்க பாகங்களை ஆபாச படம் பதிவு செய்து வந்துள்ளான். இதனைப்போன்று சம்பவத்தன்று எடுத்த புகைப்படத்தால் பல நாள் திருடன் அகப்பட்டான்.

இதனையடுத்து கொடூரனை மக்கள் காவல்துறையினர் வசம் ஒப்படைத்த நிலையில்., இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., சுமார் 4 ஆயிரம் விடியோக்கள் இருந்துள்ளது. கொடூரனை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில்., கொடூரனுக்கு 16 வருட சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.