உள்ளாட்சி தேர்தலில் தல அஜித் பெயரில் கட்சி..

தனது படத்தின் ப்ரோமோஷன் விழாக்களுக்கு வராமல் எந்த ஒரு பப்ளிசிட்டியும் இல்லாமல், தன் படங்களில் மட்டும் கவனத்தை செலுத்திகொண்டு, தமிழ் திரையுலகில் தனக்கென மாபெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ஒரே மாஸ் நடிகர் தல அஜித் தான்.

ஆனால் அவ்வப்போது அஜித்தை பற்றி அரசியல்வாதிகள் பேசுவத்துண்டு. சமீபத்தில் கூட ஒரு அமைச்சர் ரஜினி, கமல், விஜய் இவர்களெல்லாம் அரசியலுக்கு வரலாம் அஜித் வரக்கூடாதா என்று சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் மதுரையில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அஜித் திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்க உள்ளதாகவும், மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

இந்த போஸ்ட்டரில் ஏம்.ஜி.ஆர் மற்றும் அஜித் படங்கள் உள்ளது. அவர்களின் ரசிகர்கள் தான் இதை ஒட்டியிருப்பார்களோ என்ற கேள்வி எழுந்து வருகிறது. உண்மையாகவே அஜித்தின் பெயரில் கட்சி தொடங்கியுள்ளார்களா? இதை அஜித் எப்படி எடுத்துகொள்வார் என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.