பூசணிக்காயில் ஸ்பெஷல்.!

ராகி – சிவப்பு பூசணி ரோஸ்ட் :

ரோஸ்ட் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். இப்போது ராகி மற்றும் சிவப்பு பூசணியை வைத்து ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :

ராகி மாவு – 4 கப்
தேங்காய்த் துருவல் – 6 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
சிவப்பு பூசணி துருவல் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர்- தேவையான அளவு
பச்சை மிளகாய் – 4
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

முதலில் சிவப்பு பூசணி துருவல், தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

பின் ராகி மாவுடன் அரைத்த சிவப்பு பூசணி விழுது, சிறிதளவு உப்பு, 4 டீஸ்பூன் எண்ணெய் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும்.

பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், மாவை ஊத்தப்பம் போல் ஊற்றி (சற்று கனமாக) சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுத்தால் சுவையான ராகி – சிவப்பு பூசணி ரோஸ்ட் தயார்..!