இரு கைகளாலும் பந்துவீசி அசத்திய வீரர்!

தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் மான்சி சூப்பர் லீக் டி20 போட்டியில் இரண்டு கைகளாலும் பந்துவீசி அசத்தியுள்ளார் மலோக்வோனா என்ற பந்துவீச்சாளர்.

தென் ஆப்பிரிக்காவில் மான்சி சூப்பர் லீக் டி20 போட்டிகள் நடந்து வருகிறது, நேற்று நடந்த போட்டியில் கேப்டவுன் பிளிட்ஸ்- டர்பன் ஹீட் அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய கேப்டவுன் பிளிட்ஸ் 174 ஓட்டங்கள் எடுத்த நிலையில், 175 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டர்பன் ஹீட் களமிறங்கியது.

8வது ஓவரின் 7.2 பந்தை மலோக்வானா வீசும் போது வலது கையால் பந்துவீசி, எர்வி மீட்டை ஆட்டமிழக்க செய்தார்.

தொடர்ந்து 10வது ஓவரின் 5வது பந்தை இடது கையால் வீசி விலாஸ் என்பவரை ஆட்டமிழக்க செய்தார்.

ஒரே போட்டியில் இரு கைகளாலும் பந்துவீசி விக்கெட் வீழ்த்திய மலோக்வானாவின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.