இன்றைய ராசிபலன் (20.11.2019)

விகாரி ஆண்டு – கார்த்திகை 4 – புதன்கிழமை (20.11.2019)
நட்சத்திரம் : மகம் மாலை 6.55 வரை பின்னர் பூரம்
திதி : அஷ்டமி காலை 11.52 வரை பின்னர் நவமி
யோகம்: சித்த – அமிர்த யோகம்
நல்லநேரம்: காலை 9.15 – 10.15 / மாலை 4.45 – 5.45

புதன்கிழமை சுப ஓரை விவரங்கள்
(காலை 9 முதல் 10 வரை, பகல் 1.30 – 3.00 வரை, 4 முதல் 5 வரை, இரவு 9 முதல் 10 வரை)
சுபகாரியங்கள் : கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள்

மேஷ ராசி
மேஷ ராசி நேயர்களே, புதிய திட்டங்கள் தீட்டி அதை செயல்படுத்த முடியும். தெய்வ பிரார்த்தனைகளை உடனுக்குடன் நிறைவேற்றவும். நட்பு வட்டம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் தன லாபம் உண்டு.

ரிஷப ராசி
ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வர். வீட்டில் முக்கிய விசேஷங்கள் நடைபெறும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

மிதுன ராசி
மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். கணவன் மனைவிக்குள் வீண் விவாதம் வந்துப் போகும். முன்பு தடைப்பட்ட வேலையை மீண்டும் தொடர முடியும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கடக ராசி
கடக ராசி நேயர்களே, குடும்ப பெருமையை உயர்த்த முடியும். மற்றவர்களை அலட்சியப்படுத்தி பேச வேண்டாம். பெற்றோர்களின் அன்பும், ஆசியும் கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

சிம்ம ராசி
சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பணம் சேமிப்பில் கவனம் செலுத்தவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

கன்னி ராசி
கன்னி ராசி நேயர்களே, வசீகர பேச்சால் அடுத்தவர்களை எளிதில் கவர முடியும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பர். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

துலாம் ராசி
துலாம் ராசி நேயர்களே, உடல் நலம், மனநலம் சீராக இருக்கும். உங்களை கண்டு கொள்ளாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவர். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

விருச்சிக ராசி
விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உடன்பிறப்பு வகையில் சில சங்கடங்கள் வரும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

தனுசு ராசி
தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் திட்டமிடாத செலவுகளும் ஏற்படும். மனம் வலிமை கூடும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

மகர ராசி
மகர ராசி நேயர்களே, பிடிவாதத்தால் முக்கிய நபர்களின் நட்பை இழக்க நேரிடும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வரும் பாக்கியம் கிட்டும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.

கும்ப ராசி
கும்ப ராசி நேயர்களே, புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். சமூக பணிகளில் ஆர்வம் ஏற்படும். வீட்டில் பராமரிப்புச் செலவுகள் கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர்.

மீன ராசி
மீன ராசி நேயர்களே, வித்தியாசமான அணுகு முறையால் குடும்ப சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும். உறவினர்ககளின் அன்பு தொல்லை அதிகரிக்கும். கடன் பிரச்சனை தலை தூக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.