குடும்பத்தையே பலாத்காரம் செய்த இளைஞன்.!!

தாய், சகோதரி, சகோதரன் மனைவி உள்ளிட்ட அனைவரையும் பலாத்காரம் செய்த இளைஞர் கொலை. குடும்பமே சேர்ந்து கொலை செய்துள்ளனர்.

மத்திய பிரதேசம் மாநிலம், டாட்டியா பகுதியை வசித்து வரும் சுஷில் ஜாதவ் (வயது 24) என்ற இளைஞர் கோபால்தாஸ் மலைப்பகுதியில் சடலமாக கிடந்தார். சடலத்தை மீட்ட காவல்துறையினர் சுஷில் ஜாதவ்வின் இறப்பு குறித்து அவரது குடும்பத்தார்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அவரது குடும்பத்தினர் அளித்த வாக்குமூலம், போதைக்கு அடிமையான சுஷில் ஜாதவ், முழுநேரமும் குடித்துவிட்டு தான் வீட்டிற்கு வருவார். அப்படி வரும் சுஷில், தாய், சகோதரி, சகோதரனின் மனைவி ஆகியோரை பலாத்காரம் செய்துள்ளார். இந்த பலாத்காரம் பல நாட்கள் நடந்து வந்தது இதனால் ஆத்திரம் அடைந்து, அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம்.

அதன்படி நவம்பர்11ம் தேதி போதையில் சகோதரனின் மனைவியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தபோது அனைவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து அவனை கொலை செய்தோம். பின் அவனது உடலை தூக்கி சென்று மலைப்பகுதியில் போட்டுவிட்டோம். இவ்வாறு குடும்பத்தினர் வாக்குமூலம் அளித்தனர். இதையயடுத்து குடும்பத்தினர் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.