மேடையில் முதல்வர் எடப்பாடியை கலாய்த்து தள்ளிய சூப்பர் ஸ்டார்..

தமிழ் சினிமாவில் அழிக்க முடியாத இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் தர்பார் படப்பிடிப்பில் பிசியாக இருப்பது அனைவருக்கும் தெரியும். மேலும், நேற்று சென்னையில் நடந்த உலக நாயகன் கமல் ஹாசனின் பிறந்தநாள் விழாவாக ‘உங்கள் நான்’என்கிற நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும், இதில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் மேடையில் கலையுலக நண்பர்களையும், நடிகர் கமலின் உழைப்பை பற்றியும் கமலின் நடிப்பை பற்றியும் பெருமையாக பேசிக்கொண்டு வந்தார். அப்போது, தமிழக முதல்வர் எடப்பாடி அவர்களை பற்றி பேசிய ரஜினி இரட்டை அர்த்தத்துடன் கலாய்த்து பேசினார்.

அதிலும் குறிப்பாக “திரு. எடப்பாடி 2 வருடங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் ஆவார் என்று கனவில் கூட நினைத்து பாத்திருக்க மாட்டார் ஆனால், அதிசயம் நடந்தது என்று பேசினார். மேலும், பேசிய ரஜினி

திரு. எடப்பாடி அவர்கள் முதலமைச்சர் ஆன பிறகு மிஞ்சி போனால் 10 நாள் அல்லது 1 மாதம் அல்லது 6 மாதம் தான் எடப்பாடியால் முதலமைச்சராக இருக்க முடியும் என்று சொல்லாத ஆளே கிடையாது. ஆனால் அதிசயம், அற்புதம் நடந்தது” என்று எடப்பாடியை செமையாக கலாய்த்து பேசியுள்ளார் நடிகர் ரஜினி.

தற்போது இந்த வீடியோ இவரது ரசிகர்களால் பெரிதளவில் பல்வேறு இணையதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.