இன்றைய ராசிபலன் (19.11.2019)

ஸ்ரீ விகாரி ஆண்டு – கார்த்திகை 3 – செவ்வாய்கிழமை (19.11.2019)
நட்சத்திரம்: ஆயில்யம் இரவு 8.26 வரை பின்னர் மகம்
திதி : ஸப்தமி பகல் 2.03 வரை பின்னர் அஷ்டமி
யோகம் : சித்த யோகம்
நல்லநேரம் : காலை 7.45 – 8.45 / மாலை 4.45 – 5.45

செவ்வாய்க்கிழமை – சுப ஓரை விவரங்கள்
(காலை 10.30 முதல் 11 வரை, பகல் 12 முதல் 1 வரை 4.30 முதல் 6 வரை, இரவு 7 முதல் 8 வரை)

மேஷ ராசி
மேஷ ராசி அன்பர்களே, குடும்ப தேவைகள் சீக்கிரத்தில் நிறைவேறும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். பழைய பிரச்சினைகளுக்கு சுமூக முறையில் தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

ரிஷப ராசி
ரிஷப ராசி அன்பர்களே, குடும்பத்தில் குறைகள் ஏதும் இருக்காது. நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவேறும். கடன் பிரச்சனை சீராகும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மிதுன ராசி
மிதுன ராசி அன்பர்களே, உங்கள் பெருந்தன்மையை மற்றவர்கள் புரிந்துகொள்வர். உடலிலும், மனதிலும் புது தெம்பு பிறக்கும். எந்த ஒரு செயலையும் உடனுக்குடன் செய்ய முடியும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

கடக ராசி
கடக ராசி நேயர்களே, வாக்கு பலிதம் ஏற்படும். உடன்பிறப்பு வகையில் சுப விரையம் ஏற்படும். பொது பிரச்சனைகள் எதிர்கொள்வதில் அதிக கவனம் தேவை. தொழில் ரீதியான பயணங்கள் இருக்கும்.

சிம்மம் ராசி
சிம்மம் ராசி நேயர்களே, எதிர்காலம் பற்றிய சிந்தனை இருக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். எவரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும்.

கன்னி ராசி
கன்னி ராசி நேயர்களே, குடும்ப சுமை கூடும். வர வேண்டிய பணம் தற்போது கைக்குவந்து சேரும். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.

துலாம் ராசி
துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு பார்க்க வேண்டிவரும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். எதிரிகளின் பலம் குறையும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

விருச்சிகம் ராசி
விருச்சிகம் ராசி நேயர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பெற்றோர்களின் நலனில் அக்கறைகொள்ளவும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். புதுத் தொழில் தொடங்கும் யோகம் உண்டு.

தனுசு ராசி
தனுசு ராசி நேயர்களே, விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். உடல் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமை குறையும்.

மகரம் ராசி
மகரம் ராசி நேயர்களே, தூரத்து உறவினர்களின் ஆதரவு பெருகும். புதிய முயற்சிகள் அனுகூலமான பலனை தரும். முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் கனனமாக இருக்கவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்

கும்பம் ராசி
கும்பம் ராசி நேயர்களே, குடும்பத்தில் தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். மனம் சந்தோஷம்படியான விஷயங்கள் நடக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் சகஊழியர்கள் ஆதரிப்பர்.

மீன ராசி
மீன ராசி அன்பர்களே, எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிவரும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.