ஜிம்மில் கெத்து காட்டும் லாஸ்லியா..!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 105 நாட்களாக மிகவும் விறுவிறுப்பாக, வெற்றிகரமாக சென்றது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருந்து போட்டி நடைபெற்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் லொஸ்லியா.

லொஸ்லியா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மறுநாளே இவருக்கென ஏராளமான ரசிகர்பட்டாளமும், ஆர்மியும் உருவானது. மேலும் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் எப்பொழுதும் கலகலப்பாக இருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு கவின் மீது காதல் ஏற்பட்டு பல பிரச்சனைகளை சந்தித்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து தனது சொந்த ஊரான இலங்கைக்கு சென்றிருந்த லாஷ்லியா மீண்டும் சென்னை வருவதாக செய்திகள் வெளியாகியது.

அவ்வப்போது இணையத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் லாஸ்லியா தற்போது வீடியோ ஒன்றை தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஜிம்மில் தான் வொர்க்கவுட் செய்வதை பல்வேறு கோணங்களில் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோவது இணையத்தில் வைரலாகி வருகின்றது.