இன்றைய ராசிபலன் (13.11.2019)

விகாரி ஆண்டு – ஐப்பசி 27 – புதன்கிழமை (13.11.2019)
நட்சத்திரம் : கார்த்திகை இரவு 11.25 வரை பின்னர் ரோஹிணி
திதி : பிரதமை இரவு 8.34 வரை பின்னர் துவிதியை
யோகம்: அமிர்த – சித்த யோகம்
நல்லநேரம்: காலை 9.00 – 10.00 / மாலை 4.45 – 5.45

புதன்கிழமை சுப ஓரை விவரங்கள்
(காலை 9 முதல் 10 வரை, பகல் 1.30 – 3.00 வரை, 4 முதல் 5 வரை, இரவு 9 முதல் 10 வரை)
சுபகாரியங்கள் : கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள்

மேஷ ராசி
மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கடினமான வேலைகளை கூட சுலபமாக செய்ய முடியும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் உயர்ந்த நிலையை எட்ட முடியும்.

ரிஷப ராசி
ரிஷப ராசி நேயர்களே, மற்றவர்கள் உங்களை புரிந்துகொள்ளவிலையை என ஆதங்கம் ஏற்படும். நட்பு வட்டம் விரிவடையும். உடன்பிறப்புகளால் நெருக்கடிகள், செலவுகள் வரலாம். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் ஏற்படும்.

மிதுன ராசி
மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் பழைய சந்தோஷம் மீண்டும் திரும்பும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். பண வரவில் இருந்த தடை நீங்கும். தொழில், வியாபாரம் விரிவடையும்.

கடக ராசி
கடக ராசி நேயர்களே, இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பான பலனை தரும். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். நண்பர்களால் சில மனக்கசப்புகள் வந்து நீங்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

சிம்ம ராசி
சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். மற்றவர்களுக்காக சில செலவுகள் செய்ய வேண்டிவரும். பெற்றோரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

கன்னி ராசி
கன்னி ராசி நேயர்களே, குடும்ப விஷயங்களில் அடுத்தவர் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். உடல் உபாதைகளை அலட்சியம் செய்ய வேண்டாம். வாகன வகையில் சில செலவுகள் வரும். உத்யோகம் சீராக இருக்கும்.

துலாம் ராசி
துலாம் ராசி நேயர்களே, வாக்கு சாதுரியம் ஏற்படும். அடுத்தவர் விமர்சனத்திற்கு செவி சாய்க்க வேண்டாம். கடன் வாங்கி செலவு செய்ய வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.

விருச்சிக ராசி
விருச்சிக ராசி நேயர்களே, நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிவரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

தனுசு ராசி
தனுசு ராசி நேயர்களே, வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். வீட்டில் நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். மற்றவர்களுக்காக சில விஷயங்களை விட்டு கொடுத்து போகவும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும்

மகர ராசி
மகர ராசி நேயர்களே, குடும்ப விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும். பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நலம் தரும். விலை உயர்ந்த பொருட்களை இரவல் வாங்குவது, கொடுப்பது வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கும்ப ராசி
கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிவரும். உறவினர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். பண சேமிப்பில் கவனம் செலுத்தவும். உத்யோகத்தில் பல நல்ல சலுகைகள் கிடைக்கும்.

மீன ராசி
மீன ராசி நேயர்களே, குடும்பத்திலும் வெளியிலும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது அவசியம். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. வாகனத்தில் மித வேகம் அவசியம். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.