தமிழ் சினிமாவில் எப்போதும் தரமான படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் கைதி படம் தீபாவளிக்கு வந்து மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படம் ரூ 86 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தளங்களில் கூறப்பட்டது, இதை நாமும் தெரிவித்து இருந்தோம்.
தற்போது கைதி ரூ 88 கோடி வரை உலகம் முழுவதும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, கார்த்தியின் திரைப்பயணத்தில் இதுவரை அதிகம் வசூல் செய்த படமாக தோழா இருந்து வந்தது.
இதை கைதி முறியடித்து ரூ 100 கோடி கிளப்பில் இணைய இன்னும் ரூ 12 கோடி தான் தேவை, அப்படியிருக்க இந்த வாரம், திரையரங்கு எண்ணிக்கை, வேறு படங்கள் போட்டிக்கு இல்லாதது போன்ற காரணத்தால் கைதி ரூ 100 கோடி கிளப் உறுதி என கூறப்படுகின்றது.