சுண்டியிழுக்கும் வகையில், தொகுப்பாளினி ரம்யா வெளியிட்ட அசத்தல் புகைப்படம்!

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருப்பவர் ரம்யா. டிவி நிகழ்ச்சி மட்டுமின்றி., சினிமா நிகழ்ச்சிகளையும் ரம்யா தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர்.

சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்து, தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் விஜெ.ரம்யா. இவர் சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். இவர் ஆரம்பத்தில் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது பட வெளியீடு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.

தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் ‘சங்கத்தலைவன்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தில், கருணாஸ், நடிகை சுனுலட்சுமி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் மணிமாறன் இயக்கி வருகிறார். வெற்றிமாறன் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், தொகுப்பாளினியாக இருக்கும் வரை குடும்ப பாங்கான உடைகளை அணிந்து வந்த ரம்யா, தற்போது சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவுடன் கவர்ச்சி காட்ட தொடங்கிவிட்டார். நீச்சல் குளத்தில் இருக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்