இன்றைய ராசிபலன் (03.11.2019)

ஸ்ரீ விகாரி ஆண்டு – ஐப்பசி 17 – ஞாயிற்றுக்கிழமை (03.11.2019)
நட்சத்திரம் : பூராடம் அதிகாலை 3.21 வரை பின்னர் உத்திராடம்
திதி : சஷ்டி அதிகாலை 5.43 வரை பின்னர் ஸப்தமி
யோகம் : அமிர்த யோகம்
நல்லநேரம் : காலை 7.45 – 8.45 / மாலை 3.15 – 4.15

ஞாயிற்றுக்கிழமை சுப ஓரை விவரங்கள்
காலை 7.30 முதல் 10.00 வரை, பகல் 2 முதல் 4.30 வரை, இரவு 9 முதல் 12 வரை
சுபகாரியங்கள் : மருந்து உண்ண, பேட்டி காண, யாத்திரை செய்ய சிறந்த நாள்

மேஷ ராசி
மேஷ ராசி நேயர்களே, சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நெருங்கியவர்களால் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். அலுவலக பணியில் அமைதி நிலவும்.

ரிஷப ராசி
ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சுயதொழிலில் லாபம் அதிகரிக்கும்.

மிதுன ராசி
மிதுன ராசி நேயர்களே, குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விருப்பம் ஏற்படும். பண வரவு கணிசமாக உயரும். மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும்.

கடக ராசி
கடக ராசி நேயர்களே, விருந்தினர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். செய்தொழில் சிறப்படையும்.

சிம்ம ராசி
சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பெற்றோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். உடல் அசதியும், சோர்வும் அவ்வப்போது வந்து போகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கன்னி ராசி
கன்னி ராசி நேயர்களே, உங்கள் பெருந்தன்மையை மற்றவர்கள் புரிந்துகொள்வர். திருமண காரியம் கைகூடும். கடன் பிரச்னையை ஓரளவு சமாளிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் நீங்கும்.

துலாம் ராசி
துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிவரும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பூர்வீக சொத்து விற்கப்பட்டு அதில் உங்கள் பங்கு கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

விருச்சிக ராசி
விருச்சிக ராசி நேயர்களே, குடும்ப வருமானம் வெகுசிறப்பாக இருக்கும். தடைபட்ட உறவு மீண்டும் துளிர்க்கும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் முன்னேற்றம் உண்டு.

தனுசு ராசி
தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதியவர்கள் நட்பால் ஆதாயம் உண்டு. உடன்பிறப்பு வகையில் பணம் விரையம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மகர ராசி
மகர ராசி நேயர்களே, குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். தேவைக்கு ஏற்ப பணம் வந்து கொண்டிருக்கும். தொழில், வியாபாரம் கைகொடுக்கும்.

கும்ப ராசி
கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். நெருங்கிய உறவினர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு.

மீன ராசி
மீன ராசி நேயர்களே, நண்பர்களிடம் சற்று அளவோடு பழகுவது நல்லது. மனதை மகிழ்விக்கும் சம்பவம் ஒன்று நடக்கும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுத்து சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். அலுவலக பணியில் கூடுதல் கவனம் தேவை