தன்னை வளர்த்த தாய்க்கு வரன் தேடும் மகள்..!

கணவரை பிரிந்து மற்றும் இழந்து துணையின்றி இருக்கும் பெண்கள், தங்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வாழ்ந்து வருபவர்களை “சிங்கிள் மதர்” என்று அழைக்கப்படுவது வழக்கம். தனக்கு பிறந்த குழந்தையை தாமே வளர்த்துவிட சமுதாய எண்ணத்தை புறந்தள்ளி இன்னும் பல அன்னைகள் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.

இவ்வாறாக கணவரை இழந்து வளர்ந்து வந்த 21 வயதாகும் சட்டக்கல்லூரி மாணவியான அஸ்தா வர்மா., தனது தாயாரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவருக்காக வரன் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இது குறித்த தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த அஸ்தா கூறியதாவது., “ஆணொருவரின் துணையின்றி எனது தாயார் எனக்கான தேவையை பார்த்து பார்த்து செய்து வந்தார். இப்போது நான் எனது தாயாருக்கு புதிய வாழ்க்கையை அமைத்து தர விரும்பியுள்ளேன்.

எனது தாயாருக்கு 50 வயதுடைய அழகான துணையொன்று வேண்டும் என்றும்., அவருக்கு அசைவ உணவு உண்ணும் நபராகவும் – குடிப்பழக்கம் இல்லாத நபராகவும் இருக்க வேண்டும்” என்றும் பதிவு செய்துள்ளார்.

இந்த விஷயம் குறித்த ட்விட்டானது இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது. மேலும்., இதனை கவனித்த சிலர் கேட்ட கேள்விகளுக்கும் அஸ்தா தொடர்ந்து தனது பதிலை தெரிவித்து வருகிறார்.