சாம்சுங் நிறுவனம் அறிமுகம் Samsung Galaxy Fold எனும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி..!!!

சாம்சுங் நிறுவனம் நீண்ட இழுபறிக்கு பின்னர் Samsung Galaxy Fold எனும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.

இக் கைப்பேசியின் திரையானது பக்கவாட்டிற்கு மடிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இப்படியிருக்கையில் மேல் கீழாக மடிக்கக்கூடிய மற்றுமொரு ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் குறித்த புதிய கைப்பேசியானது முன்னைய மடிக்கக்கூடிய கைப்பேசியிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றது, எவ்வாறு மடிக்கக்க முடியும் என்பது தொடர்பான விளக்கங்களை உள்ளடக்கிய டெமோ வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இக் கைப்பேசியின் ஏனைய சிறப்பம்சங்கள் மற்றும் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

blob:https://www.youtube.com/366518ca-b6ee-40e3-8c48-46694cb14079