ஆண்களின் திருமண வயதில் மாற்றம்.?!

ஆண்களின் திருமண வயது 18 என குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்திய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் குழந்தை திருமண தடுப்பு சட்டம் 2016 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது, இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதுகுறித்து அமைச்சகங்கள் இடையே ஒரு கூட்டமும் நடைபெற்றதாக தகவல் வந்துள்ளது. இது தொடர்பாக ‘டி பிரிண்ட்’ இணையதளம் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின்படி, பெண்களுக்கான திருமண வயது 18 மற்றும் ஆண்களுக்கான திருமண வயது 21 ஆகவும் இருக்கிறது.

இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து ஆண்களுக்கான திருமண வயதை 16 ஆக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது.

அதேபோல் தற்போது இருக்கும் சட்டத்தின்படி திருமண வயதை அடைவதற்கு முன்னதாகவே திருமணம் செய்து கொண்டால், அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ அந்த திருமணம் செல்லும். ஆனால் தற்போது இதை சட்டதிருத்தத்தின் மூலம் மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி இனி திருமண வயதை அடையாத இருவர் திருமணம் செய்து கொண்டால் அவர்களின் திருமணம் செல்லாது. மேலும், திருமணம் செய்து வைப்பவர்கள் மற்றும் அதை ஆதரிப்பவர்களுக்கு கொடுக்கப்படும் சிறை தண்டனை இரண்டு வருடங்களில் இருந்து ஏழு வருடங்களாக அதிகரிக்கப் போவதாக மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அதற்கான அபராத தொகையையும் ஒரு லட்சத்தில் இருந்து 7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.